புதுச்சேரி

பாகூரில் நடந்த மாநில அளவிலான கோ கோ, கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டிய காட்சி.

மாநில அளவிலான கோ கோ, கபடி போட்டி-செந்தில்குமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்

Published On 2022-12-30 10:17 IST   |   Update On 2022-12-30 10:17:00 IST
  • புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக கிராமப்புறத்தில் மாநில அளவிலான கோ கோ மற்றும் கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.
  • போட்டிகளில் திட்டக்குழு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

புதுச்சேரி:

புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக கிராமப்புறத்தில் மாநில அளவிலான கோ கோ மற்றும் கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி புதுவை 3-ம் வட்டத்தின் ஏற்பாட்டில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வித்துறை துணை இயக்குனர் சிவக்குமார், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் சுதா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேரோனாஸ் விஜயலட்சுமி, கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியர் லிங்கசாமி, மாநில போட்டிகளில் திட்டக்குழு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 360 வீரர், வீராங்கனைகள் மற்றும் 60 நடுவர்கள் பங்கேற்றனர்.

2 நாட்கள் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு 3-ம் வட்டத்தின் செயலர் பழனி வரவேற்றார். ஓய்வு பெற்ற மூத்த உடற்கல்வி விரிவுரையாளர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 3-ம் வட்டத்தின் உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் தொகுத்து வழங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிவசாமி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News