புதுச்சேரி

கோப்பு படம்.

பணியாளர் சீர்திருத்தத்துறை 36 வருடம் பின்தங்கி உள்ளது-அமைச்சக ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Published On 2023-07-20 13:40 IST   |   Update On 2023-07-20 13:40:00 IST
  • ஆணையில் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காலாவதியான ஆணை ளை போட்டி தேர்விற்கான பாடத்திட்டங்களாக பரிந்துரைப்பது ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிர்வாக சீர்கேட்டை உருவாக்கும்.

புதுச்சேரி:

புதுவை அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை கடந்த 16-2-2023 உதவி யாளர் பதவிக்கு துறை சார்ந்த போட்டித் தேர்வு நடத்த ஆணை வெளியிட்டது. அந்த ஆணையில் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பாடத்திட்டத்தில் 1987-ம் ஆண்டு புதுவை அரசால் வெளியிடப்பட்ட அலுவலக நடைமுறை கையேடு உள்ளடக்கிய தாகும்.

கடந்த 36 வருடங்களில் மத்திய அரசு சட்ட திட்டம் மற்றும் விதிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து ஆணையாக பிறப்பித்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசால் வெளியி டப்பட்ட அலுவலக நடைமுறை கையேட்டில் எந்த விதமான திருத்தங்களோ இன்று வரை செய்யப்பட வில்லை. 36 வருடத்திற்கு முன்பு என்னென்ன சட்ட விதிமுறைகள் இருந்ததோ அதுதான் அதில் குறிப்பிட ப்பட்டுள்ளது.

கருக்கமாக கூறினால் தற்போது போட்டி தேர்விற்கு கொடுக்கப் பட்ட பாடமான அலுவலக நடைமுறை கையேடு காலா வதியான விதிகள் மற்றும் சட்டத்தை உட் கொண் டுள்ளது. இப்படிப்பட்ட காலாவதியான ஒரு பாடத்திட்டத்தை போட்டி தேர்வுக்கு கொடுத்திருப்பது தேர்வு எழுதுபவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.

உதாரணமாக தற்போது நடைமுறையில் உள்ள ஆணையின்படி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வருடத்திற்கு 8 நாட்கள் மட்டுமே தற்காலிக விடுப்பு எடுக்க முடியும். ஆனால் தற்போது போட்டி தேர்வுக்கு பாடத்திட்டமாக குறிப்பிட்டுள்ள அலுவலக நடைமுறை கையேட்டில் வருடத்திற்கு 12நாள் தற்காலிக விடுப்பு எடுக்க லாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு நடை முறை விதிகள் மிகத் தவறாக உள்ளது.

இத்தகைய செயல் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்துறை செயல் 36 வருடம் பின்தங்கி யுள்ளதை தெளிவாக காட்டுகிறது. காலாவதியான ஆணைகளை போட்டி தேர்விற்கான பாடத்திட்டங்களாக பரிந்து ரைப்பது ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிர்வாக சீர்கேட்டை உருவாக்கும்.

ஆதலால் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அலுவலக நடைமுறை கையேட்டை இன்று வரை அமுலில் உள்ள விதிகளை உள்ளடக்கி திருத்தம் செய்து வெளியிட வேண்டும். எனவே அறிவிக்கப்பட்ட துறை சார்ந்த போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News