புதுச்சேரி

புதுவை நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் 172-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

புனித விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

Published On 2023-08-06 12:39 IST   |   Update On 2023-08-06 12:39:00 IST
  • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
  • ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் மிகவும் பழமை வாய்ந்த நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயஆண்டு பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் சிறப்பு திருப்பலி நடத்தினார்.தொடர்ந்து கொடி தேவாலயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஊர்வலமாக வந்தது. அதனை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் சிறப்பு ஆசிர்வாதம் செய்தார். அதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

விழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் நாள்தோறும்  என இருவேளைகளிலும் சிறப்பு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி பெறுகிறது. இதில் பங்குதந்தைகள், அருட்தந்தைகள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா ஆடம்பர தேர்பவனி வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதில் முன்னாள் பாளையங்கோட்டை ஆயர் ஜூடு ஜெலால்ட் பால்ராஜ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

விழாவிற்கான ஏற்பாடு களை பங்குத்தந்தையர்கள் பெர்க்மான்ஸ் பீட்டர், ஜான்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News