புதுச்சேரி

பிரதமர் மோடியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து பேசிய காட்சி.

பிரதமர் மோடியுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்திப்பு

Published On 2023-10-17 12:10 IST   |   Update On 2023-10-17 12:10:00 IST
  • டெல்லியில் ஜி-20 உறுப்பு நாடுகளின் பாராளு மன்ற சபா நாயகர்களின் பி-20 மாநாடு நடந்தது.
  • இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார்.

புதுச்சேரி:

டெல்லியில் ஜி-20 உறுப்பு நாடுகளின் பாராளு மன்ற சபா நாயகர்களின் பி-20 மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அதன் பின்னர், பிரதமர் மோடி இம்மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News