புதுச்சேரி

ஹெரிடேஜ் லேடிஸ் சர்கிள் சார்பில் சவுரிராயலு அரசு பெண்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கிய காட்சி.

அரசு பெண்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி.

Published On 2023-03-11 09:01 GMT   |   Update On 2023-03-11 09:01 GMT
  • புதுவை ஹெரிடேஜ் லேடிஸ் சர்கிள் மற்றும் டொயோட்டா அண்ணாமலைஸ் குரூப் சார்பில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் விழா நடைபெற்றது.
  • பள்ளிக் கல்வித் துறை 2-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை சவுரிராயலு அரசு பெண்கள் பள்ளியில் புதுவை ஹெரிடேஜ் லேடிஸ் சர்கிள் மற்றும் டொயோட்டா அண்ணாமலைஸ் குரூப் சார்பில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் புதுவை ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் தலைவர் சுபாஷினி திலீப் மற்றும் பிரியா மனோஜ் பங்கேற்று டி.வி.யை வழங்கினர்.

பள்ளிக் கல்வித் துறை 2-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பொறுப்பாசிரியை கோமதி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News