புதுச்சேரி
கோப்பு படம்.

புதுவை மீனவர்களின் பாதுகாப்புக்கு ஸ்மார்ட் போன்

Published On 2023-10-08 06:04 GMT   |   Update On 2023-10-08 06:04 GMT
  • கவர்னர் தமிழிசை அறிவிப்பு
  • மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னேன்.

புதுச்சேரி:

காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்த மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

ஐதராபாத் மீன் வளத்துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆராய்ச்சி விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களோடும் இணைந்து சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற பேரிடர்கள் நிகழ்வதை முன்கூட்டியே தெரிந்து மீனவர்களுக்கு 'ஸ்மார்ட் மொபைல் போன்' மூலம் தெரியப்படுத்த ஆலோசனை சொன்னார்கள்.

மீனவர்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா?" என்று நான் கேட்டேன். அவர்கள் "தெரியாது" என பதிலளிக்க, "இந்த தொழில்நுட்பத்தை நீங்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தால் புதுவையில் மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னேன். ஏனென்றால், இது மீனவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் உகந்தது.

மீனவர்களுக்கு மீன்பிடிப்பது மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பது அவர்களின் தொழிலை தொழில் நுட்பங்கள் மூலம் மேம்படுத்த இது போன்ற உதவிகளை அரசு செய்ய வேண்டும். மீனவர்கள் தொழில் நுட்பத்தோடு அவர்களின் தொழில் வளர திறன் மேம்படுத்தப்பட வேண்டும்,

மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள். விருந்தி னர்களை சிறப்பு செய்ய பொன்னாடை களுக்கு பதிலாக கைத்தறி ஆடைகளை கொடுத்தால் நெசவாளர்கள் வாழ்க்கை மேம்படும். இதனை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம் மீன் பிடிப்பதில் இருப்பதைப் போல கைத்தறி ஆடைகளை நெய்வதிலும் பொருளா தாரம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News