புதுச்சேரி
கோப்பு படம்.
சிறுவந்தாடு மோட்சகுள ஆஞ்சநேயர் கோவிலில் லட்சத்தீப பெருவிழா
- புதுவை அருகே நெட்டப்பாக்கம் அருகே சிறுவந்தாடு மோட்ச குளத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி லட்சத்தீப பெருவிழா நடந்தது.
- பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே சிறுவந்தாடு மோட்ச குளத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி லட்சத்தீப பெருவிழா நடந்தது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனை யடுத்து ராதே கிருஷ்ணன் திருக்கல்யாணம் நடை பெற்றது. திருக்கல்யா ணத்தை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஜோடிக்கப்பட்டு, வீதி உலா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பா டுகளை சரவணன் குடும்பத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் கணபதி, பாஸ்கரன் உட்பட பொதுமக்கள் செய்து இருந்தனர்.