புதுச்சேரி

கோப்பு படம்.

கடையை உடைத்து காமாட்சி விளக்குகள்-எந்திரம் திருட்டு

Published On 2023-09-26 14:00 IST   |   Update On 2023-09-26 14:00:00 IST
  • மூட்டையில் கட்டி வைத்திருந்த 50 காமாட்சி யம்மன் விளக்குகள் மற்றும் கட்டிங் மிஷின் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்
  • கேமராக்களை ஆய்வு செய்து காமாட்சியம்மன் விளக்குகள் மற்றும் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கீழ் அக்ரகாரம் தண்ணீ தொட்டி தெருவை சேர்ந்தவர் அய்யனார்(வயது43). இவர் வில்லியனூர் ஜி.என்.பாளையத்தில் பித்தளை பொருட்களுக்கு பாலிஷ் போடும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வழக்கம் போல் கடைக்கு வந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பாலிஷ் செய்து மூட்டையில் கட்டி வைத்திருந்த 50 காமாட்சி யம்மன் விளக்குகள் மற்றும் கட்டிங் மிஷின் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரிந்து உள்ளே சென்று காமாட்சியம்மன் விளக்குகள் மற்றும் எந்திரத்தை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து அய்யனார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து காமாட்சியம்மன் விளக்குகள் மற்றும் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News