புதுச்சேரி

கோப்பு படம்.

தமிழில் படித்த மாணவர்களுக்கு சென்டாக்கில் தனி ஒதுக்கீடு-செந்தில்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-03-17 05:16 GMT   |   Update On 2023-03-17 05:16 GMT
  • தி.மு.க. உறுப்பினர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் பொது விவாதத்தில் பேசியதாவது:-
  • மாநிலத்தை நம்பி இருக்காமல் பஞ்சாயத்து மூலமே பல வேலைகளை செய்ய முடியும் மூலதன செலவீன நிதி15 சதவீதமாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.

புதுச்சேரி:

தி.மு.க. உறுப்பினர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் பொது விவாதத்தில் பேசியதாவது:-

பட்ஜெட்டில் 2023 - 24 ஆண்டு வருவாய் வரிகள் மூலம் ரூ 4087 கோடி என்று சொல்லப்பட்டுள்ளது 2021- 22-ல் ரூ 4661 கோடி, அடுத்த ஆண்டு ரூ.4383 கோடியாக இருந்தது. அது தற்போது 4087 கோடியாக குறைந்துள்ளது. கலால் வரி வளர்ச்சி அடைந்துள்ளது.

விவசாயத்தை பாதுகாப்பதற்கும் பல சங்கடங்களை அனுபவிக்கிறோம் அதனால் தான் கலால் வரியில் உள்ளாட்சி வரி ஒதுக்கீடு செய்து வருமானத்தை தர வேண்டும்.மாநிலத்தை நம்பி இருக்காமல் பஞ்சாயத்து மூலமே பல வேலைகளை செய்ய முடியும் மூலதன செலவீன நிதி15 சதவீதமாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.மாநில அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய கடனை குறைக்க மத்திய அரசு உதவிட வேண்டும் குறிப்பாக நீண்ட கால கடனாக 50 ஆண்டு கால கெடுவில் கடன் வழங்கி மாநில அரசின் கடன் சுமையை போக்க வேண்டும்.

தமிழில் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு சென்டாக்கில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். கியாசுக்கு மாதம் ரூ. 300 மானியம் மாநில அரசு வழங்கும் அறிவிப்பு மத்திய அரசின் சுமையை மாநில அரசு ஏற்றதாகவே உள்ளது.

தொழில் தொடங்க ரூ.100 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு சதவீதம் வீதம் 5 ஆண்டு காலத்திற்கு மானியம் போதுமானது அல்ல. அதனை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News