புதுச்சேரி

கோப்பு படம்.

ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கு தனி வங்கி-செந்தல்குமார் எம்.எல்.ஏ. யோசனை

Published On 2023-03-29 10:40 IST   |   Update On 2023-03-29 10:40:00 IST
  • உழவு எந்திர த்திற்கு வழங்குவது போல நெல் நடவு, உலர் எந்திரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
  • ஈமச்சடங்கு தொகையை ஆதிதிராவிட நலத்துறை போல சமூக நலத்துறையும் உடனுக்குடன் பயனாளிக்கு வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் குமார் பேசியதாவது:-

விவசாயி களுக்கு விவசாய கருவிகள் வாங்க மானியம் வழங்க வேண்டும்.

உழவு எந்திர த்திற்கு வழங்குவது போல நெல் நடவு, உலர் எந்திரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். விளை பொருள் சேமிப்பதற்கான மானியம் வழங்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பதற்கு நடமாடும் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். கால்நடை தீவனம் தகுதியான அனைவருக்கும் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

ஈமச்சடங்கு தொகையை ஆதிதிராவிட நலத்துறை போல சமூக நலத்துறையும் உடனுக்குடன் பயனாளிக்கு வழங்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷனை அமலாக்க வேண்டும். பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்து புதிதாக மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும்.

ஆதி திராவிட மக்கள் மக்கள் வாழும் பகுதியில் உள்ள கோவில் ஒரு கால பூஜைக்கான நிதியை சிறப்பு கூறு நிதியிலிருந்து தர வேண்டும். அங்கு புதிய கோவில் கட்டுமான பணிக்கும் சிறப்பு கூறு நிதியிலிருந்தும் கூடுதல் நிதி தர வேண்டும்.

ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கு தனி வங்கியை உருவாக்கி தொழில் முனைவோருக்கு சிறப்புகூறு நிதியில் மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு செந்தில்குமார் பேசினார்.

Tags:    

Similar News