புதுச்சேரி

திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சீனு.மோகன்தாசு தலைமையில் புதிய நிர்வாகிகள் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாநில தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளராக சீனு.மோகன்தாசு நியமனம்

Published On 2023-08-25 13:09 IST   |   Update On 2023-08-25 13:09:00 IST
  • மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டனர்.
  • கோதண்டபாணி, கலிவரதன், கலிமுல்லா, ஜபருல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில திமுகவுக்கு 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டனர். அடுத்த கட்டமாக கழகத்தின் 23 அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைமைக் கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.

புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, முதல் கட்டமாக இளைஞர் அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து மீனவர் அணிக்கு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று புதுவை மாநில இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஒப்புதலுடன், கழக இலக்கிய அணிச் செயலாளர், வி.பி.கலைராஜன் அறிவித்துள்ளார்.

இதன்படி, புதுவை மாநில இலக்கிய அணித் தலைவராக கலைமாமணி ராஜா, துணைத் தலைவராக பாண்டியன், அமைப்பாளராக சீனு.மோகன்தாசு, துணை அமைப்பாளர்களாக சோமசுந்தரம், தர்மராஜா, ஆளவந்தார், கோதண்டபாணி, கலிவரதன், கலிமுல்லா, ஜபருல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News