புதுச்சேரி

பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

10 ஆயிரம் பெண்களுக்கு சேலை-பிரியாணி விருந்து

Published On 2023-08-18 14:55 IST   |   Update On 2023-08-18 14:55:00 IST
  • முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வழங்கினார்
  • நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று அங்கு 500 பெண்களுக்கு புடவை மற்றும் 500 பேருக்கு சர்க்கரை ஆகியவற்றை பாஸ்கர் வழங்கினார்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜெ.பேரவை மாநில செயலாளருமான பாஸ்கர் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.

இதனையொட்டி இன்று காலை தனது வீட்டின் எதிரே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது தாயார் கமலம் அம்மாள் மற்றும் தனது சகோதரரும், அ.தி.மு.க. மாநில செயலாளருமான அன்பழகன் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.

இதனை தொடர்ந்து புவன்கரே வீதியில் உள்ள சித்தர் கோவிலுக்கு சென்று அங்கு வழிபாட்டார். பின்னர் அங்கு பொதுமக்களுக்கு காலை டிபன் வழங்கினார்.

இதன் பின்னர் நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று அங்கு 500 பெண்களுக்கு புடவை மற்றும் 500 பேருக்கு சர்க்கரை ஆகியவற்றை பாஸ்கர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து தனது வீட்டில் தனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் தொகுதி பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னாள் சபாநாயகர் சபாபதி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து ெதரிவித்தனர்.

மேலும் தொழிலதிபர் உத்திரவேல், ஜெ.பேரவை மாநில இணைச் செயலாளர் கே.மணிவண்ணன், லயன் சுரேஷ், முன்னாள் கவுன் சிலர் பாஸ்கர், சீனிவாசன், சந்தோஷ் சுரேஷ், ரவி ஆட்டோ கூல் சர்வீஸ் ரவி மற்றும் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஏராளமானோர் சால்வை அணிவித்தும், ஆளுயுர மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாளையொட்டி முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கு சேலையும், பிரியாணி விருந்தும் பாஸ்கர் வழங்கினார்.

இதற்கிடையே கடந்த 15 நாட்களாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் புதுவை-கடலூர் சாலை மற்றும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிறந்த நாளை யொட்டி மருத்துவ முகாம், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் பேனர்கள், கட்அவுட்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு வண்ணக்கோலமாக காட்சியளித்தது.

Tags:    

Similar News