புதுச்சேரி

கோப்பு படம்.

டிராக்டர் திருடிய மணல் வியாபாரி கைது

Published On 2023-07-08 13:49 IST   |   Update On 2023-07-08 13:49:00 IST
  • சம்பவத்தன்று இந்த டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியை யாரோ திருடி சென்று விட்டனர்.
  • திருடப்பட்ட டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி

புதுவை அரும்பார்த்த புரத்தை அடுத்த, முத்து பிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). பொதுப்பணித்துறை காண்டிராக்டர்.

கடந்த ஆண்டு தவளக்குப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நடந்த பணிக்காக ராஜா தனக்கு சொந்தமான டிராக்டரை நிறுத்தி வைத்து இருந்தார்.

சம்பவத்தன்று இந்த டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியை யாரோ திருடி சென்று விட்டனர்.

இந்த நிலையில் கரிக்கலாம்பக்கம் அருகே தமிழக பகுதியான கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த ஜல்லி மணல் வியாபாரி சுந்தர் என்ற தனசேகரன் ராஜாவுக்கு போன் செய்து உனது டிராக்டரை இன்ஸ்சூரன்ஸ் பதிவு முடிந்து விட்டது. இன்னும் ஏன்? புதுப்பிக்கவில்லை என கேட்டார்.

அப்போது திருடு போன டிராக்டரை பற்றி சுந்தர் கேட்டதால் அவர் மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ராஜா குமாரமங்கலத்துக்கு சென்று சுந்தரிடம் கேட்டபோது உனது டிராக்டரை திருடி அதை கடலூர் பகுதியில் ரூ.80 ஆயிரம் அடமானம் செய்து வைத்திருப்பதாக சுந்தர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா இதுபற்றி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.அதன் பெரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியை திருடி அடகு வைத்த சுந்தர் என்ற தனசேகரனை கைது செய்தனர். திருடப்பட்ட டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News