புதுச்சேரி

சுதானா நகர் பகுதியில் நடந்த பூமி பூஜையில் முதல் அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர், சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தகாடசி .

ரூ.6 கோடி செலவில் 8 நகருக்கு துருபிடிக்காத குடிநீர் குழாய் வசதி

Published On 2023-09-10 14:10 IST   |   Update On 2023-09-10 14:10:00 IST
  • முதல் -அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
  • ரூ. 3 கோடியே 36 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் முதல்- அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கம் விடுபட்ட பகுதியான வில்லியனூர் ரோட்டின் தெற்கு பகுதி, கணபதி நகர், சேத்திலால் நகர், குபேரன் நகர், கோவிந்தராஜன் நகர், வரதராசு நகர், மகாலட்சுமி நகர், முத்துலட்சுமி நகரின் அனைத்து உள் வீதிகளுக்கும் துருப்பிடிக்காத குடிநீர் குழாய் புதைத்து சாலைகளை மறு சீரமைப்பு , அம்ரூத் திட்டத்தில் ரூ.5 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் செய்வததற்கான பூமி பூஜை  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். அரியாங்குப்பம் தொகுதி பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை அரசு செயலர் டாக்டர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் தணிகைவேல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து முதலியார் பேட்டை தொகுதி சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் சுதானா நகர் ஆர்ச்சில் இருந்து அரவிந்த் நகர், அங்காளம்மன் நகர் வழியாக முருங்கப்பாக்கம் -நாட்டார் தெரு, பள்ளத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் தார்சாலை அமைக்க சிட்பி வங்கி நிதி உதவியுடன் ரூ. 3 கோடியே 36 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் முதல்- அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News