புதுச்சேரி

கோப்பு படம்.

வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் ரூ.500 அபராதம்-ஜான்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-03-28 14:13 IST   |   Update On 2023-03-28 14:13:00 IST
  • மீனவர்களுக்கு அடிப்படை வசதியை மேம்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
  • மக்களுக்கு குடிநீர் கட்டணத்தை அதிகப்படுத்துவதால், பொறுப்புடன் குடிநீரை குறைவாக பயன்படுத்துவார்கள்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் ஜான்குமார் எம்.எல்.ஏ. (பா.ஜனதா ) பேசியதாவது:

மீனவர்களுக்கு அடிப்படை வசதியை மேம்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. புதுவையில் முன்மாதிரி மீனவ கிராமம் அமைக்க மத்திய அரசிடமிருந்து நிதி பெறும் திட்டம் மீனவர்களுக்கு நன்மை அளிப்பதாகும்.

புதுவை ஆட்சி பரப்பில் மீன் உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு குடிநீர் கட்டணத்தை அதிகப்படுத்துவதால், பொறுப்புடன் குடிநீரை குறைவாக பயன்படுத்துவார்கள். அப்போதுதான் எதிர்கால சந்ததி யினருக்கு நாம் தண்ணீரை கொண்டு சேர்க்க முடியும். எனது தொகுதியில் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கால்வாயில் வீணாக செல்கிறது.

புதுவையில் பெரிய வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்களை போடு பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும். தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.250 கொடுக்க வேண்டும். கேசினோவை புதுவைக்கு கொண்டு வர வேண்டும். கவர்ச்சியான குதிரை வண்டிகள் மூலம் சுற்றுலா பயணிகள் புதுவையை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். நவீன சுற்றுலா சார்ந்த திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News