பிம்ஸ் ஆஸ்பத்திரியில் தொற்றா நோய் குறித்து வட்டமேசை மருத்துவ மாநாடு தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.
பிம்ஸ் ஆஸ்பத்திரியில் வட்டமேசை மருத்துவ மாநாடு
- மாநாட்டில் பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி பேசும் போது தொற்றா நோய்கள் சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது.
- புதுச்சேரியில் தொற்றா நோய் குறித்த திறன் மேம்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்றார்.
புதுச்சேரி:
பிம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் எக்கோ இந்தியா அமைப்பு சார்பில் பெருகி வரும் தொற்றா நோய் குறித்து விவாதிக்க வட்ட மேசை மருத்துவ மாநாடு கல்லுாரி அரங்கில் நடந்தது.
பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். பிம்ஸ் மருத்துவமனை முன்னாள் சமுதாய மருத்துவ பேராசிரியர் ஜில்லே சிங் கலந்து கொண்டு மாநாட்டின் கையேட்டை வெளியிட்டார்.
மாநாட்டில் பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி பேசும் போது தொற்றா நோய்கள் சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது.
ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மற்றும் அறிவு பகிர்வு ஆகியவையால் மட்டுமே நோயை தடுக்க முடியும்.
எக்கோ இந்தியாவுடான இந்தஒத்துழைப்பு மற்றும் முன்னெடுப்பு புதுச்சேரியில் தொற்றா நோய் குறித்த திறன் மேம்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்றார்.
மாநாட்டில், எக்கோ இந்தியாவின் துணை தலைவர் டாக்டர் சந்தீப் பல்லா, பிம்ஸ் மருத்துவமனை துணை முதல்வர் ஸ்டாலின், மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், பிரபல மருத்துவ நிபுணர்கள் டாக்டர் தாஸ், சி.எம்.சி., மருத்துவமனை பேராசிரியர் சாமுவேல், டாக்டர் ஜெரால்ட் மற்றும் டாக்டர் விஜய் பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த முன்னணி மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பரமித்தா தாஸ் நன்றி கூறினார்.