புதுச்சேரி

 அரசூர் பகுதியில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

அரசூர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சாலை பணி

Published On 2023-10-04 06:19 GMT   |   Update On 2023-10-04 06:19 GMT
  • சுமார் 10 வருடமாக தார் சாலை இல்லாமல் இருந்து வந்தது
  • வாகன ஓட்டிகள் சேறு சகதியில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

புதுச்சேரி:

ஊசுடு தொகுதி க்குட்பட்ட அரசூர் பகுதியில் உள்ள குமரன் நகர் மற்றும் முத்துக்குமரன் நகருக்கு சுமார் 10 வருடமாக தார் சாலை இல்லாமல் இருந்து வந்தது. மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சேறு சகதியில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஆணை பெறப்பட்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் தியாகராஜன், பொதுச் செயலாளர் இளவரசன், கிளை தலைவர் அன்பு, கட்சி நிர்வாகிகள் உத்திரகுமார், செல்வம், அபிஷேக், தொகுதி பா.ஜனதா சாலை பொறு ப்பாளர் கருணாகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News