புதுச்சேரி

 பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரெயின்கோட் ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, ரெயின்கோட்

Published On 2023-08-30 13:44 IST   |   Update On 2023-08-30 13:44:00 IST
  • ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • மாணவர்களுக்கு இலவச அரிசி தலா 7கிலோ மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

புதுச்சேரி:

காமராஜர் நகர் தொகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, ரெயின்கோட் ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

புதுச்சேரி அரசு கல்வி துறை சார்பில் காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச அரிசி தலா 7கிலோ மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா சாந்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரெயின் கோட் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News