கோப்பு படம்.
ஓய்வு பெற்ற போலீசாருக்கு இறுதி சடங்கில் மரியாதை
- போலீசார் பணியில் இருக்கும் போது இறந்தால், இறுதி சடங்கில் போலீஸ் மரியாதை அளிக்கப்படும்.
- இந்திய காவல் பணி அதிகாரிகளின் இறுதி சடங்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 16 காவ லர்கள் கறுப்பு பேட்ஜ், மலர்வளையம் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவர்.
புதுச்சேரி:
போலீசார் பணியில் இருக்கும் போது இறந்தால், இறுதி சடங்கில் போலீஸ் மரியாதை அளிக்கப்படும். கேரளா போலீசில் ஓய்வு பெற்ற போலீசார் இறந்தா லும், போலீஸ் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை பின்பற்றி புதுவையிலும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இறந்தால் போலீஸ் சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற போலீசார், அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இறந்தால் போலீஸ் இறுதி மரியாதை செலுத்தப்பட வேண்டும். இதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய காவல் பணி அதிகாரிகளின் இறுதி சடங்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 16 காவ லர்கள் கறுப்பு பேட்ஜ், மலர்வளையம் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவர். ஆய்வாளர் முதல் முதுநிலை கண்காணிப்பாளர் இறுதி சடங்கில் துணை உதவி ஆய்வாளர் தலைமையில் 8 காவலர்கள் கருப்பு பேட்ஜ், மலர்வளையம் வைத்து துப்பாக்கியால் சுடுவர்.
சப்-இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரையிலான இறுதி சடங்கில் உதவி சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 காவலர்கள் கருப்பு பேட்ஜ், மலர் வளையம் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியுடன் இறுதி சடங்கு செலுத்துவர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற எஸ்.பி. முனிசாமி யின் இறுதிசடங்கு கருவடிக்குப்பத்தில் நடந்தது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர், 8 போலீசார் அடங்கிய குழு சார்பில் இறுதி அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த உத்தரவை பிறப்பித்த டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி.,
ஐ.ஜி., தலைமையக சீனியர் எஸ்.பி. ஆகியோருக்கு ஓய்வு பெற்றோர் சங்கத்தினர் துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் சற்குணன், இணை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் வீரப்பன், துணை ெபாருளாளர் அப்துல்ரசாக், உறுப்பினர்கள் காஞ்சன், சுப்பிரமணியின் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.