புதுச்சேரி

அரசு ஆரம்ப பள்ளியை சீரமைக்கும் பணிகளை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

ரூ.12.93 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி-லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2023-02-03 04:11 GMT
  • சேலிய மேடுபேட்டில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில், பழுதடைந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்காகவும், புதிதாக கழிவுநீர் தொட்டி அமைத்து, பழுதான பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.12 லட்சத்து 93 ஆயிரம் செலவில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பொதுப் பணித்துறை உதவிப்பொறி யாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பள்ளி தலமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

ஏம்பலம் தொகுதிக் குட்பட்ட சேலிய மேடுபேட்டில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில், பழுதடைந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்காகவும், புதிதாக கழிவுநீர் தொட்டி அமைத்து, பழுதான பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.12 லட்சத்து 93 ஆயிரம் செலவில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, கல்வித்துறை துணை ஆய்வாளர் (வட்டம்-3) பக்கிரிசாமி, பொதுப் பணித்துறை உதவிப்பொறி யாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பள்ளி தலமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News