புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ. உள்ளனர்.
ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி மாலை
- காங்கிரஸ் கட்சியினரும் மரியாதை செய்தனர்
- வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி:
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா இன்று புதுவை அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி..ரமேஷ், பாஸ்கர், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி சத்பவனா உறுதிமொழி வாசிக்க மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, வக்கீல் மருது பாண்டியன், ஆர்.இ.சேகர், ரகுமான், இளையராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் மலரஞ்சலி செலுத்த ப்பட்டது.