புதுச்சேரி

கோப்பு படம்.

வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

Published On 2023-03-27 04:43 GMT   |   Update On 2023-03-27 04:43 GMT
  • புதுவை முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
  • மேலும் வருகிற 3-ந் தேதி கோவிலில் 12 மணிக்கு மேல் ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் நடைபெற்று வருகிறது.

அதன்படி 28-ம் ஆண்டு ராமநவமி உற்சவம் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

உற்சவம் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவ நாட்களில் பெருமாளுக்கு காலை, மாலையில் விசேஷ திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் அலங்காரமும், பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.

மேலும் வருகிற 3-ந் தேதி கோவிலில் காலை 12 மணிக்கு மேல் ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் கும்ப பூஜை, பூர்ணாஹூதி அதன் பிறகு மங்களாசாசனம், சாற்றுமுறை ஆகியவை நடைபெறுகின்றன.

முன்னதாக 2-ந் தேதி 6 மணிக்கு மேல் அனுச்சை, கும்ப பிரதிஷ்டை ஹோமம், பூர்ணாஹூதி, சாத்துமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில் கைங்கரிய சபா செய்து வருகிறது.

Tags:    

Similar News