புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

ரெயில்வே தண்டவாளப் பாதை சீரமைப்பு

Published On 2023-08-18 15:05 IST   |   Update On 2023-08-18 15:05:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
  • பல ஆண்டுகளாக அந்த இடம் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்களை எதிர்கொண்டனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட் பட்ட வாணாரப்பேட்டை ரெயில்வே நிலையத்துக்கு செல்லும் தண்டவாளம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள தண்டவாள இணைப்பு ஆகிய இடங்களில் மேடு பள்ளமாக இருந்தது.

இப்பகுதி வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் தினமும் பய ணித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த இடம் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்களை எதிர்கொண்டனர்.

இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ரெயில்வே நிர்வாகத்திடம் சீரமைக் குமாறு கோரிக்கை வைத்தார். இதனையேற்று அங்கு தார்சாலை அமைத்து சீர் செய்யப்பட்டது.

இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். தார்சாலை அமைத்து கொடுக்க உதவி செய்ததற்கு ரெயில் நிர்வாகத்துக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது துணை செயலாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, மாநில மாணவர் அணி நிசார், கிளை செய லாளர் ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News