புதுச்சேரி
கல்லூரி மாணவர்களுக்கு நடந்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்த காட்சி.
கல்லூரி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
- அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
- வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் தலைமை நீதிபதி செல்வநாதன், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில் குமார், புதுவை தொழிலாளர் நீதிபதி ஷோபனாதேவி, முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.