புதுச்சேரி

ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய மகளிர் கபடி போட்டியில் பங்கேற்கச் செல்லும் கபடி அணியை சங்க தலைவர் விஜயலட்சுமி ஜெயராமன் தலைமையில் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மகளிர் கபடி போட்டியில் புதுவை அணி பங்கேற்பு

Published On 2023-03-21 14:46 IST   |   Update On 2023-03-21 14:46:00 IST
  • புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் முகாம்கள் நடத்தி கபடி வீராங்கனைகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அதன்படி 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • ஆசிய கோல்டு மெடலிஸ்டும் அணியின் மேலாளருமான ஜெயக்குமார் உடன் சென்றனர்.

புதுச்சேரி:

ஹரியானா மாநிலத்தில் 69-வது தேசிய சீனியர் மகளிர் கபடி போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்க புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் முகாம்கள் நடத்தி கபடி வீராங்கனைகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அதன்படி 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்க செல்லும் வீராங்கனைகளை புதுவை பஸ் நிலையத்தில் புதுவை மாநில கபடி சங்க தலைவர் விஜயலட்சுமி ஜெயராமன் தலைமையில் பொதுச் செயலாளர் ஆரியசாமி, பொருளாளர் கபிலன், துணைத் தலைவர் மலையான் மற்றும் கபடி சங்க நிர்வாகிகள் பாஸ்கர், மருது,பாபு மற்றும் பலர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

ஹரியானா செல்லும் 12 கபடி வீராங்கனைகளுடன் பயிற்சியாளர் கதிரவன், ஆசிய கோல்டு மெடலிஸ்டும் அணியின் மேலாளருமான ஜெயக்குமார் உடன் சென்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை புதுவை மாநில கபடி சங்க மக்கள் தொடர்பு அலுவலர் பூபாலன் செய்திருந்தார்.

Tags:    

Similar News