புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை சட்டசபை கட்டுமான நிதி ரூ.528 கோடியாக உயர்வு

Published On 2023-08-13 13:42 IST   |   Update On 2023-08-13 13:42:00 IST
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
  • 75-வது சுதந்திர அமிர்தபெருவிழாவில் பிரதமர் மோடியிடம் அந்த மண் ஒப்படைக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

75-வது அமிர்த பெருவிழாவை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து இல்லங்களிலும் பிரதமரின் வேண்டு கோளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள் கொடியேற்ற வேண்டும்.

இதேபோல் வருகிற 17-ந் தேதி காலை 10 மணி அளவில் 108 கிராம பஞ்சாயத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித மண் கலசம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நேரு யுவகேந்திரா துணை இயக்கு நரிடம் ஒப்படைக்கப்படும்.

அந்த மண் 27-ந் தேதி டெல்லி ராஜ்பவனில் உள்ள 75-வது சுதந்திர அமிர்தபெருவிழாவில் பிரதமர் மோடியிடம் அந்த மண் ஒப்படைக்கப்படும்.

பல அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர்.

அரசுக்கு எதிராக செயல்படும், மக்கள் திட்டங்களை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்யப்படுவர்.

டெல்லியிலும் புதுவையிலும் தியாகச்சுவர் ஒரே நாளில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை சட்டப்பேரவை திட்ட மாதிரி வரைபடம் முடிக்கப்பட்டு, அடுத்த வாரம் டெல்லிக்கு அனுப்ப ப்படும். சட்டப்பேரவை கட்ட ரூ.528 கோடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது.

ஓ.பி.சி. கணக்கெடுப்பு அங்கன்வாடி ஊழியர்கள் மூலமே செயல்ப டுத்தப்படும். சார்பு செயலர்கள் கோப்புகளை தயாரிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். பணியை அவர்கள் துரிதமாக செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்த ரவிட்டுள்ளார். பணி செய்யாத சில சார்பு செயலர்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

இ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

Tags:    

Similar News