புதுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை
- பிரசாந்த்குமார் மனைவியின் சேலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாந்த்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை காவல் துறையில் சிக்மா செக்யூரிட்டி பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏ.எஸ்.ஐ) பிரசாந்த்குமார் (50) பணியாற்றி வந்தார்.
இவர் மேரி உழவர்கரையில் வைரம் நகர் 3-வது குறுக்குத்தெருவில் வசித்து வந்தார். இவரின் மகளுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்து மகள் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரசாந்த்குமார் நேற்று இரவு தனது மனைவியின் சேலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் இதைப்பார்த்த அவரின் மனைவி மேரிகிளேர் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாந்த்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.