புதுச்சேரி

பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் உண்ணாவிரதம் இருந்த காட்சி.

பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் உண்ணாவிரதம்

Published On 2023-03-07 14:09 IST   |   Update On 2023-03-07 14:09:00 IST
  • புதுவை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
  • காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் இன்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணிமாறன், எழில்வண்ணன், வெங்க டேசன், அன்பழகன், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தின் சிறப்பு தனி அதிகாரியாக பணி செய்து கொண்டிருக்கும் புகழேந்திக்கு பொதுப் பணித்துறை பணிகளை மேற்பார்வையிட ஆணை வெளியிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும். காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 5 ஆண்டு களாக நிலுவையில் உள்ள வழக்குக்கை உடனே வாபஸ் பெற ஆவண செய்ய வேண்டும்.

அனைத்து பிரிவு பொறி யாளர்களின் பணிநிரந்தரம் மற்றும் சீனியாரிட்டியை வெளியிட வேண்டும். முறையான மாற்றல் கொள்கையை அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகையை வலியுறுத்தி இந்த உண்ணா விரத போராட்டம் நடை பெற்றது.

Tags:    

Similar News