புதுச்சேரி

புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை கலால்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-02-17 12:09 IST   |   Update On 2023-02-17 12:09:00 IST
  • கலால்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுவை சாமிபிள்ளை தோட்டத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டால் தினமும் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பதால் புதிதாக மதுக்கடை திறக்ககூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனினும் அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் இன்று கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News