புதுச்சேரி

கோப்பு படம்.

புதுச்சேரியில் 25 மின்சார பஸ்கள் இயக்க ஏற்பாடு

Published On 2023-07-26 10:55 IST   |   Update On 2023-07-26 10:55:00 IST
  • ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ தூரம் ஓடும்
  • புதுவையில் அடுத்த 3 மாதங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் மின்சார பஸ்களின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த பஸ்களின் விநியோகம், இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் அரசு விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

நகர்ப்புறங்களுக்குள் 15 வழித்தடங்களில் மின்சார பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளன. புதுவை போக்குவர த்துத்துறை 25 மின்சார பஸ்களை இயக்கவும், பராமரிக்கவும் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தனியார் நிறுவனத்திற்கு கடிதம் வழங்கியுள்ளது.

டெண்டர் விடப்பட்டு, அரசின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இந்தக் கடிதம் வழங்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் கடிதம் வழங்கியுள்ளதாகவும் 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டா ரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் மின்சார பஸ்களை இயக்குகிறது. முதல் மின்சார பஸ்சின் முன்மாதிரி 45 நாட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுவையில் அடுத்த 3 மாதங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

அந்த பஸ்கள் தனி வண்ணத்தில் இருக்கும். 25 பஸ்களில் 10 ஏசி பஸ்களும் 15 பஸ்கள் சாதாரணமாகவும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் 6-7 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரத்திற்கு பஸ்களை இயக்கலாம். சார்ஜ் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆகும்.

மின்சார பஸ்களுக்கு சார்ஜிங் செய்ய 2 இடங்களில் உள்கட்டமைப்பு வசதி செய்யப்படுகிறது.

40 பயணிகள் வரை அமரும் திறன் கொண்ட உயர் ஆற்றல் கொண்ட பேட்டரியில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News