புதுச்சேரி

கோப்பு படம்.

மலிவுவிலையில் கட்டுமான பொருட்கள் வழங்க வேண்டும்

Published On 2023-07-05 12:21 IST   |   Update On 2023-07-05 12:21:00 IST
  • தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்
  • அகிலஇந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன செயலாளர் ரணியப்பன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 23-வது கோரிக்கை அமைப்பு பொதுமாநாடு கரிக்கலாம் பாக்கத்தில் நடந்தது.

மத்திய பணிக்குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். மாநாட்டுக்கு முருகன், அருள், பாரிஜாதவல்லி தலைமை வகித்தனர். ஏ.ஐ.சி.சி.டி.யூ. பொதுச் செயலாளர் புருஷோத்தமன் வரவேற்றார். அகிலஇந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன செயலாளர் ரணியப்பன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

சங்க அறிக்கையை மாநில செயலாளர் ஆறுமுகம் முன்வைத்தார். மார்க்சிஸ்டு லெனினிஸ்ட் கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் அருள், பெண்கள் கழக செயலாளர் விஜயா உரையாற்றினர். கவுரவ தலைவர் சோ.பாலசுப்பிரமணியன், தலைவராக முருகன், துணைத்தலைவர்களாக புருஷோத்தமன், முருகையன், மீனாட்சி உட்பட 21 பேர் புதிய செயற்குழு கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

மாநாட்டில், கட்டுமான தொழிலாளர்களின் சட்ட கூலியை அக விலைப்படி யுடன் இணைத்து 2 மடங்காக உயர்த்த வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் ரூ.10 ஆயிரத்துக்கு குறையக் கூடாது.

கட்டுமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க புதுவை அரசு கட்டிட சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News