ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்திய காட்சி.
null
அகரம் அரசு பள்ளியில் ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பு
- மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வாயிலில் நின்று போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூரை அடுத்த அகரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் அகரம், உளவாய்க்கால், கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமப்பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அனிதா என்ற ஆசிரியை பணியிடை மாற்றம் பெற்று அகரம் பள்ளிக்கு வந்தார். அவர் சுற்றுவட்டார கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பள்ளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையின் போது வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்வித்துறை ஒரு பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்தனர்.
இதில் அகரம் பள்ளி ஆசிரியை அனிதா முத்தியால்பேட்டை அரசு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியை அனிதாவை பணியிடை மாற்றம் செய்ய கூடாது என கூறி பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை வில்லியனூரில் உள்ள கல்வித்துறையின் வட்டம் 5 அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வாயிலில் நின்று போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த ஆசிரியையை பணியிடை மாற்றம் செய்தால் தங்கள் பிள்ளைகளுக்கு மாற்று சான்றிதழ் கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்கிறோம். மேலும் நன்றாக சொல்லிக்கொடுக்கும் ஆசிரி யர்களை என் பணி யிடை மாற்றம்செய்கி றீர்கள்..? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அதிகாரிகள் உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதுவரை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.