புதுச்சேரி

அரசு கல்லூரி துணை பேராசிரியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேசிய காட்சி.

பதவி உயர்வு வழங்க வேண்டும்-நமச்சிவாயத்திடம் பேராசிரியர்கள் மனு

Published On 2023-01-12 14:36 IST   |   Update On 2023-01-12 14:36:00 IST
  • அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.
  • எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை. சம்பள நிலுவைத்தொகை, வீட்டு வாடகைப்படி நிலுவையும் வழங்கவில்லை.

அடிப்படை ஊதியத்தில் ஒரு படி நிலை உயர்வு மட்டுமே வழங்க ஆணை உள்ளது. எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை பெற்ற அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை சார்புசெயலர், இயக்குனரை அழைத்து விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

Tags:    

Similar News