புதுச்சேரி
கோப்பு படம்.
- கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
- பேனர்களை முறைப்படுத்து வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் பேனர்களை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் வல்லவன் தலைமையில் நடந்தது.
உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், நகராட்சி, கொம்யூன் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், முக்கிய சிக்னல்களில் உள்ள பேனர்களை முறைப்படுத்து வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.
இந்திரகாந்தி, ராஜீவ்காந்தி சிக்னல், அண்ணாசாலை உட்பட முக்கிய சிக்னல்கள், பள்ளிகள், கோவில்கள், மருத்துவ மனைகள் அருகில் பேனர்கள் வைக்க நிரந்தர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. எங்கு பேனர் வைக்க அனுமதிக்கலாம்? எவ்வளவு கட்டணம் வசூலிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டு, பரிந்துரை களை அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.