புதுச்சேரி

தனியார் ஆலை- தொழிற்சங்கத்துடன் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

தனியார் ஆலை- தொழிற்சங்கத்துடன்அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை

Published On 2023-02-03 04:57 GMT   |   Update On 2023-02-03 04:57 GMT
  • புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற் சாலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
  • இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்தி னருடன் வணிகவரித்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுச்சேரி:

புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற் சாலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

இவர்களுக்கு வேலை வழங்கக்கோரி தொழிற் சங்கத்தினர் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்தி னருடன் வணிகவரித்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா, துணை ஆணையர் இராகினி, சமரச அதிகாரி வெங்கடேசன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், கிருஷ்ண மூர்த்தி, ஆய்வாளர் முருகையன்.

நல அதிகாரிகள் கஸ்தூரி, ஆறுமுகம், தொழிற்சங்க நிர்வாகிகள் சோ. பாலசுப்பிரமணியம், புருஷோத்தமன், மோதிலால், ெஜயபாலன், சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களின் ஒரு ங்கிணைப்பு நிர்வாகிகள், ரமேசு, முருகையன், விஜயன், பாஸ்கர், கோ.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தனியார் நிர்வாகத்திடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழி லாளர்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலை புதுவை மாநிலத்தில் தொடர்ச்சியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News