புதுச்சேரி

பயிற்சி திட்ட லோகோவையும், செயலியையும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் அறிமுகம் செய்த காட்சி.

பெண்களுக்கு அரசியல் பயிற்சி

Published On 2023-08-14 08:51 GMT   |   Update On 2023-08-14 08:51 GMT
  • உள்ளாட்சியில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்து பெண்கள் பகிர்ந்துள்ளனர்.
  • புதியதாக சக்தி சூப்பர் ஷீ என்ற ஆப் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்தபோது அது தோல்வி யடைந்தது. ஆனால் அவர்களது முயற்சியால் உள்ளாட்சியில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்து பெண்கள் பகிர்ந்துள்ளனர்.

பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும். தற்போது வரவுள்ள தேர்தலில் இடஒதுக்கீடு எதிரொலிக்க வேண்டும். அதற்காக பெண்களுக்கு அரசியல் பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கவும் புதியதாக சக்தி சூப்பர் ஷீ என்ற ஆப் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த ஆப்பில் இணையும் பெண்களுக்கு அரசியல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அரசியலில் அதிக ஈடுபாடு உள்ள பெண்கள் இந்த ஆப்பில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து பயிற்சி பெற்று வெளியில் வரலாம். இளைஞர் காங்கிரசில் உள்ளவர்கள் கல்லூரி மற்றும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு இயக்கம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News