புதுச்சேரி

பா.ம.க. சார்பில் மக்கள் சந்திப்பு பேரணி நடந்த போது எடுத்த படம்

பா.ம.க. சார்பில் மக்கள் சந்திப்பு பேரணி

Published On 2023-10-06 13:50 IST   |   Update On 2023-10-06 13:50:00 IST
  • புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி தொடங்கி வைத்தார்.
  • மகளிர் சங்க நிர்வாகி ஏபில் இளவரசன் மற்றும் 300- க்கும் மேற்பட்ட பா.ம.க. இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுரையின் படி வருகிற பாராளு மன்ற தேர்தல் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை பா.ம.க. சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் மக்கள் சந்திப்பு பேரணியை நடத்தியது.

மணவெளி சட்டமன்ற தொகுதி இடையார் பாளையம் கிராமத்தில் இருந்து தொடங்கிய பேரணியை புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி தொடங்கி வைத்தார்.

பேரணி பூரணாங்குப்பம், புது குப்பம், நல்லவாடு, ஆண்டியார் பாளையம், வழியாக சென்று தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

பின்னர் நோணாங்குப்பம் வழியாக மணவெளி கிராமத்தில் பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதில்வன்னியர் சங்கத் தலைவர் துரைஜெயக்குமார் , மாநில வன்னியர் சங்க பொருளாளர் நரசிம்மன், மாநில தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி, மாநில ஊடக பிரிவு செயலாளர் புதுவை செல்வம், உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் மணிபாலன், ஜெயமூர்த்தி, மணவெளி தொகுதி தலைவர் முனியன், மனவெளி தொகுதி தேர்தல் பணி குழு தலைவர் சேதுபதி, மணவெளி தொகுதி செயலாளர் முருகன், வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தராஜ், இளைஞர் அணி தலைவர் பூரணாங்குப்பம் அருள் அரசன், மாணவர் சங்க செயலாளர் மகேந்திரன், தொழிற்சங்க தலைவர் ஜீவா , அஜித் ,புதுச்சேரி நகர தலைவர் தமிழ்ச்செல்வன், மகளிர் சங்க நிர்வாகி ஏபில் இளவரசன் மற்றும் 300- க்கும் மேற்பட்ட பா.ம.க. இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News