புதுச்சேரி

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு மேனிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-10-20 08:57 GMT   |   Update On 2022-10-20 08:57 GMT
  • பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.

புதுச்சேரி:

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரி ஆரோக்கியம் கிளாண்டின் வரவேற்றார். வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் 50 பேர் பாகூர் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள குளத்தைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மேலும் மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.

10 சாக்குகளில் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி முன்னிலையில் ஒப்படைத்தனர். முடிவில் மனையியல் விரிவுரையாளர் அகிலா நன்றி கூறினார்.

Tags:    

Similar News