புதுச்சேரி
தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 500 பனைவிதை நடவு செய்த போது எடுத்த படம்.
தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 500 பனைவிதை நடவு
- விவசாய சங்க தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
- புதுவை நுகர்வோர் அமைப்பு சிவசந்திரன் மற்றும் பாலசந்தர், ரவிச்சந்திரன், சக்தி பாலன், புவனேஸ் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர்.
புதுச்சேரி:
அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் பனை விதை நடவு நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் தலமை தாங்கி அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விவசாய சங்க தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து பேரடைஸ் பீச் பகுதியில் 500 பனை விதை நடவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் புதுவை நுகர்வோர் அமைப்பு சிவசந்திரன் மற்றும் பாலசந்தர், ரவிச்சந்திரன், சக்தி பாலன், புவனேஸ் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர்.