புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்த அனுமதி

Published On 2023-04-24 12:09 IST   |   Update On 2023-04-24 12:09:00 IST
  • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
  • சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன்.

புதுச்சேரி:

புதுவை மடுகரை எம்.ஆர்.சுப்புராயக்கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளியின் 70-ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.

துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. இதற்காகவே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டு வந்து தரமான கல்வியை கொடுப்பதன் மூலம் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுவர்.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானிடம் புதுவை அரசின் 121 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன். நிச்சயம் அதற்கு அனுமதி கிடைக்கும்.

2 முறை மத்திய மந்திரியை சந்தித்து பேசியுள்ளேன். அவரும் ஒப்புதல் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் வளர வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோ ர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News