கோப்பு படம்.
சுப்ரீம்கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- புதுவை அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டை அணுகி காலம் கடந்த மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் அதிகாரிகளின் அலட்சியத்தால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது. இதற்கு கவர்னர் தமிழிசை, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கம் போல் கூறியுள்ளார்.
புதுவை மாணவர்கள் நலனிலும், எதிர்காலத்திலும் உண்மையில் கவர்னருக்கு அக்கறை இருந்தால் உடனடி யாக டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து மருத்துவ மாண வர்களின் சூழ்நிலையை விளக்கி தளர்வு பெற வேண்டும். அனுமதி கிடைக்காத நிலையில் புதுவை அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டை அணுகி காலம் கடந்த மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும்.
வரும் காலத்திலாவது சென்டாக் மாணவர் சேர்க்கை முறையாக நடை பெற அங்குள்ள அதிகாரி களை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட வேண்டும்.
மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல், முறைகேடுகளை களைய சென்டாக் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறிளியுள்ளார்.