கோப்பு படம்.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ்கள், வாகனங்களுக்கு அபராதம்
- ஆம்னி பஸ்கள், டாக்சிகள், லோடுகேரியர் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டது.
- இனி வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. புதுவை வடக்கு, கிழக்கு போக்குவரத்து எஸ்.பி. மாறன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் செந்தில், கீர்த்திவர்மன் தலைமையி லான போலீசார் முருங்கப்பாக்கம், நயினார்மண்டபம், லாஸ்பேட்டை பகுதியில் முக்கிய வீதிகளில் நிறுத்தி யிருந்த வாகனங்களை அகற்றினர்.
புதுவை-முதலி யார்பேட்டை கடலூர் சாலை, உப்பளம் அம்பேத்கர் சாலையில் சாலையோரம் நிறுத்த ப்பட்டிருந்த டிராவல்ஸ் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், டாக்சிகள், லோடுகேரியர் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டது.
பொதுமக்ளுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டது. இனி வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.