புதுச்சேரி

கொம்பாக்கம் வீரன்குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

நடைபாதை அமைக்கும் பணி- சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-03-20 04:55 GMT   |   Update On 2023-03-20 04:55 GMT
  • வீரன்குளத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற உள்ளது.
  • மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை மற்றும் ஓய்வெடுக்க நாற்காலி வசதிகள் போன்ற பணி நடைபெற உள்ளது.

புதுச்சேரி:

புதுவை நகராட்சி கொம்பாக்கம் ஏரிக்கரை செல்லும் வழியில் உள்ள வீரன்குளத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற உள்ளது.

இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. எதிர்கட்சித் தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார் புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்க டாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன் தி.மு.க.தொகுதி செயலாளர் மணிகண்டன்,பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி துணை செயலாளர்கள் ஹரி கிருஷ்ணன், ஜெகன்மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குளத்தைச் சுற்றி கான்கிரீட் சுவர் எழுப்பி பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை மற்றும் ஓய்வெடுக்க நாற்காலி வசதிகள் போன்ற பணி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News