திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு பகுதியில் நான்கு வழி சாலை சர்வீஸ் ரோடுகளில் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
4 வழி சாலை சர்வீஸ் ரோடுகளில் பயணியர் நிழற்குடைகள்
- பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகின்றது.
- மின்விசிறிகள் மின்விளக்குகள் புதிதாக கொண்ட இந்த நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
புதுச்சேரி:
திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு பகுதியில் நான்கு வழி சாலை சர்வீஸ் ரோடுகளில் பயணியர் நிழற்கு டைகள் அமை க்கப்பட்டு வருகின்றது.சென்னை, நாகப்பட்டினம் ,விழுப்புரம் ,புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் எம்.என். குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடைகள் ஒரு சில இடங்களில் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
சாலை விரிவாக்க பணியின் போது 17 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறமும் இருந்த மிகவும் பழமையான மரங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தனர்.
இதனால் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பயணிகள் கடுமையான வெயில் மற்றும் மழையில் நின்று தங்களுடைய பஸ் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
தற்போது புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகின்றது.
மிகவும் சிறிய அளவில் அமைக்கப்படும் இந்த பயணியர் நிழற்குடையில், ஒரு 6 பேர் மட்டும் உட்காருவதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது அமைக்கப்பட்டு வரும் இந்த பயணியர் நிழற்குடைக்கு பொதுமக்கள் பார்த்து வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும் புதிதாக பயணியர் நிழற்குடை கண்டமங்கலம், அரியூர், கெங்கராம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட உள்ளது .
அதே போல் 4 வழி சாலைகளில் 2 புறமும் உள்ள கிராமங்களை ஒன்றிணைக்கும் பஸ் நிறுத்த பகுதிகளில் பயணிகள் அமருவதற்கு நாற்காலிகள், மின்விசிறிகள் மின்விளக்குகள் புதிதாக கொண்ட இந்த நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.