கோப்பு படம்.
இரவோடு இரவாக எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது
- முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அறிக்கை
- சிலையை சுற்றி ரவுண்டானா அமைத்து சிலையை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஒம்சக்தி சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை வில்லியனுரில் எம்.ஜி.ஆர். சிலை அகற்றம் அவரது கோடான கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
ஏற்கனவே எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட உள்ளதாக கடந்த ஆண்டு செய்தி வெளிவந்தவுடன் நான் உடனடியாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து சிலையை அகற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தேன். மேலும் சிலையை சுற்றி ரவுண்டானா அமைத்து சிலையை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்
முதல்-அமைச்சரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.ஆனால் நேற்றைய தினம் இரவோடு இரவாக சிலை அகற்றப் பட்டுள்ளது எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் இடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே புதுவை அரசு கலந்து பேசி அதே பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையை சிறப்பாக அமைத்து தர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.