புதுச்சேரி
கோப்பு படம்.
டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
- கூட்டாளிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு வீசி கொலை செய்தனர்.
- முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி(வயது32). லாரி டிரைவரான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி சவ ஊர்வலத்தில் ராஜிக்கும் ஹரி, நிர்மல் ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக ராஜியை அன்று இரவு ஹரி, நிர்மல் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு வீசி கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரி, நிர்மல் மற்றும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ரெனி, மோகன்ராஜ், ரஞ்சித் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த கொலையில் தொடர்புடைய மகாலிங்கம் என்பவர் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.