புதுச்சேரி

சிந்தனையாளர் பேரவை சார்பில் கவிதை போட்டி மற்றும் சிந்தனையரங்கம் நடைபெற்ற காட்சி. 

சிந்தனையாளர் பேரவை சார்பில் கவிதை போட்டி-சிந்தனையரங்கம்

Published On 2023-08-28 14:49 IST   |   Update On 2023-08-28 14:49:00 IST
  • புதுவை கிழக்கு கடற்கரை சாலை விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரம் மையத்தில் நடைபெற்றது.
  • கட்-அவுட் வைப்பதை தடை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர் பேரவை சார்பில் கவிதை போட்டி மற்றும் சிந்தனையரங்கம் புதுவை கிழக்கு கடற்கரை சாலை விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரம் மையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். ராமதாஸ்காந்தி, வீரசேகரன், சுசீலா, இடைகழிநாடு செல்வமணி, ராஜாராம், கவுசல்யாதேவி, மணிமேகலை, காமராசு, விசாலாட்சி, பரமேஸ்வரன், திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நடந்த கவியரங்கை சரவஸ்வதி வைத்தியநாதன் நெறி ஆளுகை செய்தார்.

புதுவை மாநில பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மற்றும் சி.பி.எஸ்.சி. பாட முறையில் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. புதுவை அரசு வருகிற அக்டோபர் 15-ந் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துறையினை அமைத்து ஆணை வெளியிட வேண்டும்.

புதுவையில் நடு ரோட்டில் பேனர், கட்-அவுட் வைப்பதை தடை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News