புதுச்சேரி
பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கிய காட்சி.
650 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
- பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா திருக்கனூரை அடுத்த கே .ஆர். பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
- பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், காட்டேரிக்குப்பம் ஃபோட்டோ ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா திருக்கனூரை அடுத்த கே .ஆர். பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட 650 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித் தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் , முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், காட்டேரிக்குப்பம் ஃபோட்டோ ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.