புதுச்சேரி

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்ட காட்சி.

உடல் பருமன் உள்ளவர்கள் புதுவையில் அதிகம்

Published On 2023-07-04 14:22 IST   |   Update On 2023-07-04 14:22:00 IST
  • எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
  • மருத்துவ ஊழியர்களுக்கும் நிர்வாகத்தினர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 

அனைத்து சிறப்பு மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் நிர்வாகத்தினர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் பொறியாளர்.வாசு, நிர்வாக மேலாளர் தேவதாஸ் ஆகியோர் மருத்துவர்களை பாராட்டி உரையாற்றினர். மருத்துவ இயக்குனர் மருத்துவர்.எம்.ஆர்.வித்யா பேசும் போது கூறியதாவது:-

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் நலனுக்கு முக்கியமானது. புதுவையின் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. சமீபத்தில் வெளியான இண்ட்-டயாப் ஆய்வின் படி நாட்டிலேயே அதிகமாக உடற்பருமன் உடையவர்கள் விகிதம் புதுவையில் இருப்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும், ஏனெனில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம்ஏற்படும் அபாயமும் உடல் பருமனால் அதிகமாகிறது.

இதற்காக மருத்துவர்கள் மக்களிடம் உடற் பயிற்சி, உரிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர்.தேவநாதன் வாசு, மருத்துவர்.வரதராஜன் வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சந்திரவதனி மற்றும் மனிதவள மேலாளர் செலின் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News