ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்ற காட்சி.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி
- ஊட்டச்சத்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
- மகளிர் சுய உதவி குழுவினர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
புதுச்சேரி:
கண்டமங்கலத்தில் வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
கண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரிய தர்ஷினி முருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சம்பந்தம் சிவக்குமார் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்த்தி, முன்னிலை வகித்தனர்.
வட்டார இயக்க மேலாளர் கணேசன் வர வேற்றார். ஒன்றிய துணை சேர்மன் நஜீரா பேகம் , ஊட்டச்சத்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வை யிட்டார்.
கண்காட்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம், துணை சேர்மன் நஜீரா பேகம், வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்த்தி ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்து சிறந்த குழுக்களை தேர்வு செய்து பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாஜலம் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அலமேலு, ராதிகா, கவுசல்யா, சவுமியா, ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கவிதா நன்றி கூறினார்.